< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிஷ் சிசோடியா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
|25 April 2023 4:29 PM IST
மதுபான விற்பனை ஒப்பந்தக்கொள்கை முறைகேடு தொடர்பான விசாரிக்கும் சிபிஐ, மணிஷ் சிசோடியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2021-22-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு தற்போது கைவிடப்படிருக்கும் டெல்லி புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி அவரை கைது செய்தது.
இந்தநிலையில், மதுபான விற்பனை ஒப்பந்தக்கொள்கை முறைகேடு தொடர்பான விசாரிக்கும் சிபிஐ, டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுபான விற்பனை ஒப்பந்தக்கொள்கை வழக்கு தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரித்தது சிபிஐ என்பது குறிப்பிடத்தக்கது.