அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
|அமிதாப் பச்சனுக்கு இன்று காலை ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் (வயது 81) மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப் பச்சனுக்கு இன்று காலை ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அவருக்கு இதயத்தில் எந்த பிரச்சினையில் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் தற்போது பிரம்மாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.
இதனிடையே அமிதாப் பச்சன் மதியம் எக்ஸ் தள பதிவில், "எப்போதும் நன்றியுடன்..." என பதிவிட்டுள்ளார். இது குறித்து பதில் அளித்த ரசிகர்கள், விரைவில் குணமடையுங்கள், வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.