< Back
ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் இ.வி. அறிமுகம்
ஆட்டோமொபைல்

மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் இ.வி. அறிமுகம்

தினத்தந்தி
|
15 Jun 2023 1:58 PM IST

டாடா மோட்டார்ஸின் பேட்டரியில் இயங்கும் கார்களில் மிகவும் பிரபலமான மாடல் நெக்ஸான். இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் புகுத்தப்பட்டு நெக்ஸான் இ.வி. மேக்ஸ் எக்ஸ்.இஸட்.பிளஸ்.லக்ஸ். என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.18.79 லட்சம். 3.3 கிலோவாட் ஏ.சி. சார்ஜருடன் இது வந்துள்ளது.

இதில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக 10.25 அங்குல தொடு திரையுடன் கூடிய ஹார்மனின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றுடன் வை-பை இணைப்பு வசதி கொண்டது. மிகவும் நுட்பமான பின்புற கேமரா இதன் சிறப்பம்சமாகும். குரல்வழி கட்டுப்பாட்டில் இதை செயல்படுத்த முடியும். இந்த கார் 180-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைக் கொண்டது.

மேலும் செய்திகள்