மேம்படுத்தப்பட்ட ஹோண்டா யுனிகார்ன்
|ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப் பட்ட அம்சங்கள் புகுத்தப்பட்டு யுனிகார்ன்- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது .
ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் யுனிகார்ன் மோட்டார் சைக்கிள் நடுத்தர வயதுப் பிரிவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இந்த மாடலில் தற்போது மேம்படுத்தப் பட்ட அம்சங்கள் புகுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதன் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் நீளம் 715 மி.மீ. ஆக உள்ளதால், இருவர் சவுகரியமாக பயணிக்கலாம். உயரமானவர்களுக்கு ஏற்ற விதமாக இந்த வாகனத்தின் உயரம் 187 மி.மீ. ஆக உள்ளது. இதில் டியூப்லெஸ் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்ச மாகும்.
இதில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி (ஏ.பி.எஸ்.), மோனோ ஷாக்அப்சார்பர் உள்ளது. சீல் செயின் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அடிக்கடி செயின் அட்ஜெஸ்ட் செய்வதைத் தவிர்க்கலாம். கருப்பு, சிவப்பு, கிரே மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,09,800.