< Back
ஆட்டோமொபைல்
இரட்டை சிலிண்டர் சி.என்.ஜி. டேங்குகளுடன் டாடா டிகோர், டியாகோ
ஆட்டோமொபைல்

இரட்டை சிலிண்டர் சி.என்.ஜி. டேங்குகளுடன் டாடா டிகோர், டியாகோ

தினத்தந்தி
|
9 Aug 2023 1:13 PM IST

கார் தயாரிப்பில் முன்னணியில் திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் டிேகார் மற்றும் டியாகோ மாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை. இவ்விரு மாடல்களும் தற்போது இரண்டு சி.என்.ஜி. டேங்குகள் கொண்டவையாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டியாகோ ஐ சி.என்.ஜி. மாடலின் விற்பனை யக விலை சுமார் ரூ.6.55 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. டிகோர் ஐ சி.என்.ஜி. மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.7.8 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. மேம்படுத்தப்பட்ட இவ்விரு மாடல்களில் பொருட்கள் வைக்கப்படும் பகுதியின் கீழே டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேங்க்கின் கொள்ளளவு 30 லிட்டர். இதனால் மொத்த கொள்ளளவு 60 லிட்டராக உள்ளது. இவ்விரு மாடல்களும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 73.4 பி.ஹெச்.பி. திறனையும், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.

இவ்விரு மாடல்களும் 5 கியர்களுடன் வந்துள்ளன. மேம்பட்ட ஐ சி.என்.ஜி. தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள் ளதால் சாலைகளில் சிறப் பான செயல்பாட்டை வெளிப் படுத்தும். நகர்ப்புற நெரிசல்களில் வாகனத்தை இயக்குவதும் எளிதாக இருக்கும்.

மேலும் செய்திகள்