< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட டி.வி.எஸ். ரைடர்
|28 April 2023 7:00 PM IST
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் ரைடர் மாடல் பலரது வரவேற்பைப் பெற்றது.
இதில் மேம்படுத்தப்பட்ட மாடலை இந் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.93,719. இது டிஸ்க் பிரேக், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் செயலி இணைப்பு வசதி கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.1 லட்சம்.
இது 124.8 சி.சி. திறன் கொண்டது. ஒற்றை சிலிண்டர் என்ஜின் 11.4 ஹெச்.பி. திறனையும், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்கையும், பின்புறம் ஒற்றை ஷாக் அப்சார்பரையும் கொண்டது.