< Back
ஆட்டோமொபைல்
டி.வி.எஸ். ரெய்டர் 125 அயர்ன்மேன், பிளாக் பேந்தர் எடிஷன் அறிமுகம்
ஆட்டோமொபைல்

டி.வி.எஸ். ரெய்டர் 125 அயர்ன்மேன், பிளாக் பேந்தர் எடிஷன் அறிமுகம்

தினத்தந்தி
|
23 Aug 2023 12:49 PM IST

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது ரெய்டர் 125 மாடல் மோட்டார் சைக்கிளில் மார்வெல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சூப்பர் ஸ்குவாட் எடிஷனாக பல்வேறு மாடல்களை தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அயர்ன்மேன் மாடலும், பிளாக் பேந்தர் மாடலும் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 125 சி.சி. பிரிவு மோட்டார் சைக்கிளில் அழகிய தோற்றத்துடன் இளைஞர்களைக் கவரும் வகையில் இவை வந்துள்ளன. ரேடியேட்டர் இல்லாமல் ஆயில் கூலிங் அமைப்பு இருப்பது இந்த மோட்டார் சைக்கிளின் சிறப்பாகும். 5 அங்குல டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் திரை இதில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.95,219 முதல் ஆரம்பமாகிறது.

பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.1,01,570. இரண்டு மாடலுமே 124.8 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இவை 11.2 பி.ஹெச்.பி. திறனையும், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 3 வால்வுகள், 5 கியர்கள், எல்.இ.டி. முகப்பு விளக்கு, எல்.இ.டி. பகலில் ஒளிரும் விளக்கு (டி.ஆர்.எல்.) ஆகிய வசதிகளை இந்த மோட்டார் சைக்கிள் கொண்டுள்ளது. முன்புறம் டெலஸ் கோப்பிக் போர்க் கையும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரையும் கொண்ட இதில் முன் சக்கரத்துக்கு டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்துக்கு டிரம் பிரேக்கும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்