டிரையம்ப் ஸ்பீட் 400, ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் அறிமுகம்
|டிரையம்ப் நிறுவனம் புதிதாக ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இரண்டு மாடல்களிலும் 398 சி.சி. திறன் கொண்ட டி.ஆர். சீரிஸ் ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. என்ஜினைக் குளிர்விக்க லிக்விட் கூலன்ட் பகுதி (ரேடியேட்டர்) இதில் அமைந்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 40 ஹெச்.பி. திறனையும், 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இரண்டு மாடல்களும் 5 கியர்களைக் கொண்டவையாகும். ஸ்பீட் மோட்டார் சைக்கிளின் எடை 170 கி.கி., ஸ்கிராம்ப்ளரின் எடை 179 கி.கி. ஆகும்.
ஸ்பீட் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.3 லட்சம்.
ஸ்கிராம்ப்ளரின் விற்பனையக விலை சுமார் ரூ.3.20 லட்சம்.