டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்
|டிரையம்ப் நிறுவனம் 400 சி.சி. திறன் கொண்ட ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2,62,996. ஏற்கனவே இந்நிறுவனம் ஸ்பீட் 400 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருந்தது. டிரையம்ப் நிறுவனத்துடன் பஜாஜ் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்நிறுவனத் தயாரிப்புகள் பஜாஜ் நிறுவன சக்கன் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. புதிய மோட்டார் சைக்கிளுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது முழுவதும் ரீபண்ட் அடிப்படையிலான முன்பதிவு தொகையாகும். ஸ்கிராம்ப்ளர் 900 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் மோட்டார் சைக்கிளின் கலவையாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்கு, இன்டிகேட்டர், பகலில் ஒளிரும் விளக்குகள் உள்ளன. செல்போன் சார்ஜிங் செய்வதற்கான யு.எஸ்.பி. சாக்கெட் வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., வாகனம் திருட்டு போவதைத் தடுக்கும் இம்மொபிலைசர் ஆகிய வசதிகள் மற்றும் லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
இது 40 பி.எஸ். திறனையும் 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் 6 கியர்கள் உள்ளன. முன்புறம் யு.எஸ்.டி. போர்க்கும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. ஸ்போக்ஸ் கொண்ட அலாய் சக்கரம் டிஸ்க் பிரேக் வசதியுடன் வந்துள்ளது. பச்சை, கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.