< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
டார்க் எடிஷனில் நெக்சான் இ.வி. மேக்ஸ்
|4 May 2023 7:00 PM IST
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதாகும்.
இந்த மாடலில் டார்க் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நெக்சான் எக்ஸ்.இஸட். பிளஸ் மற்றும் எல்.யு.எக்ஸ். ஆகிய மாடல்கள் மட்டுமே டார்க் எடிஷனாக வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.19.04 லட்சம். எல்.யு.எக்ஸ். மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.19.54 லட்சம். உள்புறம் 26.03 செ.மீ. அளவிலான(10.25 அங்குலம்) தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இனிய இசையை ஹார்மன் ஸ்பீக்கர்கள் வழங்கு கின்றன. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி கொண்டது. ரியர் வியூ கேமரா, குரல் வழி கட்டுப்பாடு வசதி கொண்டது. அலாய் சக்கரம், புரொஜெக்டர் முகப்பு விளக்கு, சுறா துடுப்பு போன்ற ஆன்டெனா, ரூப் ரெயில்ஸ் ஆகியன அழகிய தோற்றத்தை அளிக்கிறது.