< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
அடுத்த தலைமுறை டியூக் பைக்
|28 Sept 2023 12:52 PM IST
இளைஞர்கள் அதிகம் விரும்பும் டியூக் தயாரிப்புகளில் இப்போது இரண்டு புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கே.டி.எம். டியூக் 390 மற்றும் 250 டியூக் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டியூக் 390 மாடல் மோட்டார் சைக்கிள் 399 சி.சி. திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன், பல்வேறு ஓட்டும் நிலைகள், லாஞ்ச் கண்ட்ரோல் வசதி, டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.
250 டியூக் மாடலில் 5 அங்குல எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச், மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட வசதிகளோடு 2 வண்ணங் களில் வந்துள்ளது.
390 டியூக் மாடல் விலை சுமார் ரூ.3,10,520.
250 டியூக் மாடல் விலை சுமார் ரூ.2,39,000.