புதிய லெக்சஸ் ஜி.எக்ஸ். அறிமுகம்
|பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதிதாக ஜி.எக்ஸ். மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்.யு.வி. மாடலாக வந்துள்ள இந்த கார் சாகச பயணத்துக்கு ஏற்ற வகையில் உறுதியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் காரில் 3.5 லிட்டர் வி 6 இரட்டை டர்போ என்ஜின் உள்ளது. சிறப்பான செயல்திறன், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் உள்ள எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் (இ.பி.எஸ்.) வாகனம் ஓட்டுவதை மிகவும் எளிதாக்கி உள்ளது. மலைப் பகுதிகளில் பயணிப்பதற்கேற்ற வகையிலான டயர்கள், சிறப்பு பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் எத்தகைய பகுதிகளிலும் இந்தக் காரை சிறப்பாக ஓட்டிச் செல்ல முடியும். முன்னெச்சரிக்கை பாதுகாப்பு தொழில் நுட்பம் உள்ளதால் நீண்ட தூர பயணமும் பாதுகாப்பான தாக அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. 5 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தடுக்கவும், பாதசாரிகள் மீது மோதுவதைத் தவிர்க்கவும், மோதல் தடுப்பு உணர் கருவி, மோனோகியூலர் கேமரா ஆகிய உதவுகிறது. லேன் மாறுவதை எச்சரிக்கும் உணர்த்தி (எல்.டி.ஏ.) இந்தக் காரில் உள்ளது.