டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்.எம். அறிமுகம்
|டாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் அல்ட்ரோஸ் மாடல் கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவையாகும். இந்த மாடலில் தற்போது எக்ஸ்.எம். மற்றும் எக்ஸ்.எம் (எஸ்). என்ற இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனையக விலை சுமார் ரூ.6.90 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வந் துள்ளது. இதில் எஸ் மாடலின் விலை சுமார் ரூ.7.35 லட்சம்.
இப்புதிய மாடலில் மேற்கூரை, டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. ரியர் வியூ மிரரும், ஜன்னல் கண்ணாடிகளும் பேட்டரியில் இயங்குபவை. இவற்றுடன் சாவியின்றி செயல்படும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. இரண்டு மாடலிலும் மேனுவல் மாடல் 5 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் மாடல் 6 கியர்களுடனும் வந்துள்ளது. இந்தக் கார் 72.5 பி.ஹெச்.பி. திறனையும், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு மாடலுமே 16 அங்குல சக்கரத்தைக் கொண்டுள்ளன. மிகச் சிறந்த ஓட்டும் அனுபவத்தையும், பயண அனுபவத்தையும் இந்தக் கார் அளிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.