மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா
|பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது குஷாக். இந்த மாடலில் தற்போது 1.5 டி.எஸ்.ஐ. என்ஜின் உள்ள காரை அறிமுகம் செய்துள்ளது.
இதே என்ஜின் தற்போது ஸ்லாவியா மாடலிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்ட காரைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேனுவல் கியர் மாடல்கள் 6 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் கியர் மாடல்கள் 7 கியர் களைக் கொண்டதாகவும் வந்துள்ளது.
மிக அழகிய தோற்றப் பொலிவுக்கு இரட்டை வண்ணங் களில் இது வந்துள்ளது சிறப்பம்சமாகும். டி.எஸ்.ஐ. என்ஜின் மேம்பட்ட சிலிண்டர் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்மா மேல்பூச்சு உடைய சிலிண்டரைக் கொண்டது. 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.
இது 110 கிலோவாட் திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இது எரிபொருள் சிக்கனமான வாகனமாகும். அத்துடன் சூழல் பாது காப்பானது. இதிலிருந்து கரியமில வாயு வெளியேற்றம் மிகவும் குறைவானது. இதில் மெத்தனால் கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்த முடியும். இதனால் எரிபொருள் 7 சதவீத அளவுக்கு சிக்கனமாக செலவாகும். ஸ்கோடா குஷாக் 1.5 டி.எஸ்.ஐ. ஆம்பிஷன் மாடலில் மேனுவல் கியர் மாடல் (எம்.டி.) விலை சுமார் ரூ.14,99,000. ஆட்டோமேடிக் (ஏ.டி.) கியர் மாடல் விலை சுமார் ரூ.16,79,000. இரட்டை வண்ணம் உள்ள காரின் விலை சுமார் ரூ.16,84,000. ஸ்லாவியா எம்.டி. விலை சுமார் ரூ.14,94,000. ஏ.டி. மாடல் விலை சுமார் ரூ.16,24,000, இரட்டை வண்ண மாடலின் விலை சுமார் ரூ.16,29,000.