ஸ்கோடா குஷாக் ஆனிக்ஸ் எடிஷன்
|பிரீமியம் எஸ்.யு.வி. ரகங்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் மாடலில் ஆனிக்ஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் உள்ள மாடலையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இது மேனுவல் கியர் வசதி கொண்டதாகும். இத்தயாரிப்புக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ. வரையிலான உத்திரவாதத்தை இந்நிறுவனம் அளிப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வாடிக்கை யாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தற்போது ஆனிக்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டலைன் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு இதில் சிறப்பாக உள்ளன. பின்புறம் வைபர் மற்றும் டி-பாகர் உள்ளது. அதிக வெளிச்சத்தை தரக்கூடிய பாக் விளக்குகளும் உள்ளன. தொடு உணர்தலில் கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இது 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 85 கிலோவாட் திறனையும், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. 6 கியர்களைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.12,39,000.