< Back
சிறப்புக் கட்டுரைகள்
சாம்சங் கேலக்ஸி ஏ 54, ஏ 34
சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் கேலக்ஸி ஏ 54, ஏ 34

தினத்தந்தி
|
31 March 2023 7:00 PM IST

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் மிகவும் பிரபலமானது கேலக்ஸி ரகமாகும். இதில் தற்போது ஏ 54 மற்றும் ஏ 34 மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம் தோற்றத்தில் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. அதிக நேரம் செயல்படும் வகையில் திறன் மிகு பேட்டரி (5 ஆயிரம் எம்.ஏ.ஹெச்.) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள கேமரா குறைவான வெளிச்சத்திலும் துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் கொண்டது. இதனால் புகைப்படம் மட்டுமின்றி வீடியோ காட்சி களும் தெளிவாகப் பதிவாகும். இதன் பின்புறம் கண்ணாடியால் ஆனது. இது ஸ்மார்ட்போனுக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. கிராபைட், எலுமிச்சை, வயலெட் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும். நீர் புகா தன்மை கொண்டது. ஏ 54 மாடலில் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், ஏ 34 மாடலில் 48 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

இதில் அமோலெட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாடலிலும் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கும் வசதி உள்ளது. இவ்விரு மாடலிலுமே ரகசியங்களை பாதுகாக் கும் நாக்ஸ் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட ஏ 54 மாடலின் விலை சுமார் ரூ.40,999. ஏ 34 மாடலின் விலை சுமார் ரூ.32,999.

மேலும் செய்திகள்