< Back
ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் கிகெர்
ஆட்டோமொபைல்

மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் கிகெர்

தினத்தந்தி
|
11 May 2023 6:08 PM IST

சொகுசு கார்களைத் தயாரிக்கும் பிரான்ஸின் ரெனால்ட் நிறுவனம் தனது பிரபலமான கிகெர் மாடலில் பல சிறப்பம்சங்களை புகுத்தி மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

கிகெர் ஆர்.எக்ஸ்.டி. (ஓ) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. 16 அங்குல டயமண்ட் அலாய் சக்கரம் இதன் சிறப்பம்சமாகும். 8 அங்குல தொடுதிரை ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் எல்.இ.டி. விளக்குகளைக் கொண்டதாக வந்துள்ள இந்த மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.7.99 லட்சம்.

ஹேட்ச்பேக் மாடலிலிருந்து எஸ்.யு.வி. காருக்கு மாறும் வாடிக்கையாளர் களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட் ரோல் வசதி (இ.எஸ்.பி.), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (ஹெச்.எஸ்.ஏ.), டிராக்ஷன் கண்ட்ரோல் (டி.சி.எஸ்.), டயரின் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு (டி.பி.எம்.எஸ்.) ஆகியன இதில் உள்ள சிறப்பம் சங்களாகும். இது 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. 5 கியர்களைக் கொண்டதாக ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் வந்துள்ளது. எரிபொருள் சிக்கனமானது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சோதனை ஓட்டத்தில் 20.62 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணி களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதில் 4 ஏர்பேக்குகள் உள்ளன. கார் வேகமாக செல்லும்போது கதவுகள் சாத்தியிருப்பதை உறுதி செய்யும் சென்சார், அட்ஜெஸ்ட் செய்யும் வகையி லான ஹெட்ரெஸ்ட், குழந்தைகளுக் கான ஐ-சோபிக்ஸ் வசதி கொண்டது.

மேலும் செய்திகள்