< Back
ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட போர்ஷே கேயின்
ஆட்டோமொபைல்

மேம்படுத்தப்பட்ட போர்ஷே கேயின்

தினத்தந்தி
|
4 May 2023 8:00 PM IST

பிரீமியம் மற்றும் சொகுசு கார்கள் வரிசையில் முதலிடம் வகிப்பது போர்ஷே தயாரிப்புகள்தான். இந்நிறுவனத் தயாரிப்புகளில் கேயின் மாடல் கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

இதில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். எல்.இ.டி. முகப்பு விளக்கு, பின்புற விளக்கு, பம்பரின் மேல்பகுதியில் நம்பர் பிளேட், மூன்று திரை கொண்ட டேஷ் போர்டு இதன் சிறப்பம்சமாகும். 12.6 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 அங்குல தொடுதிரை மற்றும் பயணிகளுக்கென 10.9 அங்குல தொடுதிரை ஆகியன இதில் உள்ளது.

இதில் இரட்டை டர்போ சார்ஜ்டு வி 6 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 353 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 8 ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. இ-ஹைபிரிட் மாடலிலும் வி 6 என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இது 470 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். மின்மோட்டா ரில் 90 கி.மீ. தூரம் வரை ஓடும். மேம்படுத்தப்பட்ட கேயின் மாடலின் விலை சுமார் ரூ.1.36 கோடி. இதில் கூபே மாடலின் விலை சுமார் ரூ.1.42 கோடி.

மேலும் செய்திகள்