< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
நிசான் மேக்னைட் இ.இஸட்.
|26 Oct 2023 2:05 PM IST
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் காரில் புதிதாக இ இஸட் ஷிப்ட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.6,49,900. இது 5 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் மாடல் காராகும். இதில் 1 லிட்டர் திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 71 பி.ஹெச்.பி. திறனையும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.70 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இதில் வெஹிக்கிள் டைனமிக் கண்ட்ரோல் (வி.டி.சி.), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (ஹெச்.எஸ்.ஏ.) உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. நீலம் மற்றும் கருப்பு உள்ளிட்ட இரட்டை வண்ணக் கலப்பு கொண்டவை யாக இது வெளிவந்துள்ளது.