< Back
ஆட்டோமொபைல்
நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்
ஆட்டோமொபைல்

நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்

தினத்தந்தி
|
12 Oct 2023 2:25 PM IST

நிசான் நிறுவனம், புதிதாக மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானிய மொழியில் குரோ என்றால் கருப்பு என்று அர்த்தமாகும். இதை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிறத்தில் சிறப்பு எடிஷனை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள இந்த கார் பெரும் வரவேற்பைப் பெறும் என இந்நிறுவனம் நம்புகிறது. ரூ.11 ஆயிரம் முன்பணம் செலுத்தி இந்தக் காரை முன் பதிவு செய்யலாம்.

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (இ.எஸ்.பி.), டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயரின் காற்று அழுத்தத்தைக் கண்காணிக்கும் (டி.பி.எம்.எஸ்.) வசதிகள் இதில் உள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72 ஹெச்.பி. திறனையும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட மாடலையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

இந்த மாடலின் விலை சுமார் ரூ.7.50 லட்சம்.

மேலும் செய்திகள்