புதிய ஹூண்டாய் ஐ 20 என் லைன்
|சென்னையை அடுத்துள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் ஐ 20 மாடல் ஹேட்ச்பேக் காரில் என் லைன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் மிகச் சிறந்த ஓட்டும் அனுபவத்தை இந்த ஹேட்ச்பேக் மாடல் அளிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மாடலில் 1 லிட்டர் கப்பா என்ஜின், 6 கியர்களுடன், இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் வந்துள்ளது. இதில் 16 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
40-க்கும் அதிகமான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும், 35-க்கும் அதிகமான தர பாதுகாப்பு வசதிகளும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு 6 ஏர் பேக்குகள் உள்ளது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (ஹெச்.ஏ.சி.), வெஹிக்கிள் ஸ்டெபிளிடி நிர்வாகம் (வி.எஸ்.எம்.), அனைத்துப் பயணிகளுக்குமான பாதுகாப்பு பெல்ட் வசதி, டயரின் காற்றழுத்தத்தை உணர்த்தும் கருவி, டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். இனிய இசையை வழங்க 7 ஸ்பீக்கர்களுடனான போஸ் ஸ்பீக்கர் சிஸ்டம், குரல்வழிக் கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்த கார் 120 பி.எஸ். திறனையும், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். கருப்பு, வெள்ளை, கிரே, நீலம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11.55 லட்சம்.