< Back
ஆட்டோமொபைல்
மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. ஜி.டி 63 எஸ்.இ.
ஆட்டோமொபைல்

மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. ஜி.டி 63 எஸ்.இ.

தினத்தந்தி
|
20 April 2023 4:45 PM IST

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதிதாக ஏ.எம்.ஜி. ஜி.டி 63 எஸ்.இ. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.3.30 கோடி. இது நான்கு கதவுகளைக் கொண்ட கூபே மாடலாகும். 843 ஹெச்.பி. திறன், 1,470 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது.

இது 4 லிட்டர் வி 8 பெட்ரோல் என்ஜினைக் கொண்ட ஹைபிரிட் மாடலாகும். பின்புறம் 204 ஹெச்.பி. மின் மோட்டாரைக் கொண்டுள்ளது. இதை ஸ்டார்ட் செய்த 2.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் 316 கி.மீ. ஆகும். இதில் 21 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்