பொலெரோ மேக்ஸ் பிக் அப்
|மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிதாக பொலெரோ மாடலில் மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7.85 லட்சம். இழுதிறன் அதிகம் கொண்டதாக, அதிக எடையை தாங்கும் வகையிலும், எரிபொருள் சிக்கனமானதாகவும், பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொலெரோ மாடலின் முக்கிய அம்சமான குறைவான பராமரிப்பு கொண்டதாகவும், நீடித்த செயல்திறன் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் மூன்று ஆண்டு ஆராய்ச்சி உருவாக்கத்தில் தயாரானது தான் பொலேரோ மேக்ஸ் மாடலாகும். இதன் பின்புறம் 1.3 டன் முதல் 2 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஹெச்.டி. சீரிஸில் அறிமுகமாகியுள்ளது. இது 52.2 கிலோவாட் திறன் மற்றும் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.
இதில் மஹிந்திராவின் மேம்பட்ட எம் 2 டி.ஐ. என்ஜின் உள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப டீசல் மற்றும் சி.என்.ஜி. மாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஐ-மேக்ஸ் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனம் எங்குள்ளது என்பதைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த செயலியானது 6 மொழிகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.