< Back
ஆட்டோமொபைல்
கே.டி.எம். 890 எஸ்.எம்.டி
ஆட்டோமொபைல்

கே.டி.எம். 890 எஸ்.எம்.டி

தினத்தந்தி
|
4 May 2023 7:20 PM IST

கே.டி.எம். நிறுவனம் தற்போது கே.டி.எம். 890 எஸ்.எம்.டி. என்ற பெயரிலான தனது மோட்டார் சைக்கிளை மீண்டும் மேம்பட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள பிராண்டுகளில் கே.டி.எம். தயாரிப்புகள் முன்னணி வகிக்கிறது. நீண்ட தூர சாகச பயணத்திற்கேற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையின் தன்மையை தாக்குப் பிடிக்கும் வகையிலான சேசிஸ், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன், பிரீமியம் டயர்கள் மற்றும் பிரேக்குகள் இதன் சிறப்பம்சமாகும். மலைப் பகுதிகளில் பயணிப்பதற்கு இது மிகவும் ஏற்றது. 15.8 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையில் இதன் பெட்ரோல் டேங்க் அமைந்துள்ளது.

இது 889 சி.சி. திறன் கொண்டது. 105 ஹெச்.பி. திறனை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இதில் 5 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது. இதனால் கீறல் விழாது. ஒளிரும் வாகன செயல்பாடு விவரங்கள் கண்ணைக் கூசாத வகையில் தெரியும். வாகனம் மூன்றுவித ஓட்டும் நிலைகளை (மழை, சாலை, ஸ்போர்ட்) கொண்டது. அதேபோல பந்தய மைதானங் களில் ஓட்டுவதற்கேற்ற மாற்றங்களையும் செய்துகொள்ளும் வசதி கொண்டது.

முன்புற ஹேண்டில்பாரை 6 நிலைகளில் வசதிக்கேற்ற கோணத்தில் வைத்துக்கொள்ள முடியும். ஏ.பி.எஸ்., குரூயிஸ் கண்ட்ரோல், நேவிகேஷன் வசதி கொண்டது.

மேலும் செய்திகள்