< Back
ஆட்டோமொபைல்
அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனுடன் கே.டி.எம். 390 அட்வென்சர்
ஆட்டோமொபைல்

அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனுடன் கே.டி.எம். 390 அட்வென்சர்

தினத்தந்தி
|
9 Jun 2023 3:35 PM IST

கே.டி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்திய தயாரிப்புகளில் சமீபத்தில் 390 அட்வெஞ்சர் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் தற்போது மேம்படுத்தப் பட்ட மாடலாக அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் கொண்ட மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.3.60 லட்சம். இதனை 20 சுற்று வரை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதில் 10 சுற்றுகள் அப்படியே இருக்கும். முன்புற யு.எஸ்.டி. போர்க்கும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது. சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பு கொண்டது. இலகு ரக என்ஜின் 32 கிலோவாட் (43.5 பி.எஸ்.) திறனை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும்.

இது 373 சி.சி. திறனுடைய ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு 4 ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டது. உறுதியான அலுமினிய சக்கரங்கள், மோட்டார் சைக்கிள் டிராக்ஷன் கண்ட்ரோல், இரண்டு விதமான ஓட்டும் நிலைகள் (சாலை, கரடு முரடான சாலை) உடையது. 5 அங்குல கலர் டி.எப்.டி. திரையைக் கொண்டது. 14.5 லிட்டர் கொள்ளளவுடைய பெட்ரோல் டேங்க் வாகனத்திற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

மேலும் செய்திகள்