கோமகி டி.என் 95 பேட்டரி ஸ்கூட்டர்
|கோமகி நிறுவனம் இந்த ஆண்டுக்கான புதிய பேட்டரி ஸ்கூட்டரை ``2023 கோமகி டி.என் 95’’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஆன்ட்டி ஸ்கிட் தொழில்நுட்பம் உள்ளது. மேலும் இதில் லித்தியம் அயன் பாஸ்பேட் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது தீப்பிடிக்காத தன்மை கொண்டதாகும். இதன் இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாவி இன்றி ஸ்மார்ட் போன் கட்டுப்பாட்டில் இதை இயக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கி.மீ. ஆகும். 18 லிட்டர் அளவுக்கு பொருட்களை வைக்கும் வசதி கொண்டது. இரட்டை எல்.இ.டி. முகப்பு விளக்கு, எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. முன்புற இன்டிகேட்டர்ஸ், டி.எப்.டி. திரை, நேவிகேஷன் வசதி, சவுண்ட் சிஸ்டம் கொண்டது. புளூடூத் இணைப்பு வசதி உடையது. ஸ்மார்ட்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். பார்க்கிங் அசிஸ்ட் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் வசதி கொண்டது. மெட்டல் கிரே, செர்ரி சிவப்பு நிறங்களில் வந்துள்ளது. இதில் 5 கிலோவாட் ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று ஓட்டும் நிலைகள் (எகோ, ஸ்போர்ட்ஸ், டர்போ) உள்ளது.
இதில் உள்ள பேட்டரி 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதில் இரண்டு வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன. ஒரு மாடல் 130 கி.மீ. முதல் 150 கி.மீ. தூரம் வரை ஓடும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,31,035. மற்றொரு மாடல் 150 கி.மீ. முதல் 180 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.1,39,871.