< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
கவாஸகி கே.எல்.எக்ஸ் 230.ஆர்.
|2 Aug 2023 11:51 AM IST
பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் ஜப்பானின் கவாஸகி நிறுவனம் சாகசப் பிரியர்களைக் கவரும் விதமாக கே.எல்.எக்ஸ் 230.ஆர். என்ற பெயரில் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. எலுமிச்சை பச்சை நிறத்தில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.5,21,000. நீண்ட தூரம் பயணிக்க வசதியாக சஸ்பென்ஷன், அதற்கேற்ற வகையில் உயரமான வடிவமைப்பு, குறைவான எடை, இடையூறின்றி ஸ்டார்ட் செய்ய வசதியாக ஸ்டார்ட் பொத்தான் வசதி, பெரிய அளவிலான சக்கரம் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
இது 233 சி.சி. திறன் கொண்ட பியூயல் இன்ஜெக்ஷன் நுட்பம் உடைய நான்கு ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டது. ஏர் கூல்டு வடிவிலானது. ஓட்டுபவரின் பாதுகாப்பு, சவுகரியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப் பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.