< Back
ஆட்டோமொபைல்
வோல்வோ சி 40 ரீசார்ஜ் அறிமுகம்
ஆட்டோமொபைல்

வோல்வோ சி 40 ரீசார்ஜ் அறிமுகம்

தினத்தந்தி
|
13 Sept 2023 3:38 PM IST

சுவீடனைச் சேர்ந்த சொகுசு கார்கள் தயாரிக்கும் நிறுவனம் வோல்வோ. இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெருமளவு வரவேற்பு உள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் டீசல் கார் தயாரிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. தற்போது படிப்படியாக பேட்டரியில் ஓடக்கூடிய கார்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. இந்த வரிசையில் சி 40 ரீசார்ஜ் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.61,25,000. பேட்டரியில் ஓடக்கூடிய எஸ்.யு.வி. மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 530 கி.மீ. தூரம் ஓடும் திறன் கொண்டது. இதன் உள்புறம் முழுவதும் சூழல் காப்பு பொருட்களால் வடிவமைக்கப்பட்டது. இதில் 19 அங்குல அலாய் சக்கரம் இரண்டு வண்ணங்களைக் கொண்டதாக வந்துள்ளது. உள்புறம் 9 அங்குல தொடு திரை உள்ளது. அதற்குப் பக்கவாட்டில் மெல்லியதான ஏ.சி. வென்ட்கள் உள்ளன. மர பாகங்களைக் கொண்ட டேஷ்போர்டு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர் வாகனத்தின் கட்டுப்பாடுகளை செயல்படுத்த உதவியாக உள்ளது.

இதில் உள்ள இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டது. கூகுள் மேப் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் வசதிகளும் இதில் உள்ளன. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை அமைப்பை இது கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்களைச் சார்ஜ் செய்ய வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கோணத்தைக் காட்டும் கேமரா, ஏ.டி.ஏ.எஸ். வசதி கொண்டது. வெப்பம் மற்றும் குளிர்ந்த சூழலை அளிக்கக் கூடியது. இனிய இசையை வழங்க ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. பொருட்களை வைப்பதற்கு வசதியாக 413 லிட்டர் இடவசதி உள்ளது.

இந்தக் காரில் 78 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் தோல் கலப்பு இல்லாத உள்புற இருக்கைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் 408 ஹெச்.பி. திறனையும் 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதனால் ஸ்டார்ட் செய்த 4.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் உள்ள பேட்டரி 27 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

மேலும் செய்திகள்