மெர்சிடஸ் பென்ஸ் ஜி 400 டி அறிமுகம்
|பிரீமியம் மற்றும் சொகுசு கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது .
பிரீமியம் மற்றும் சொகுசு கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஜி சீரிஸில் 400 டி ஏ.எம்.ஜி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2.55 கோடி. இது 330 ஹெச்.பி. திறன் கொண்ட 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,200 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். நான்கு சக்கர சுழற்சி கொண்ட இதில் 9 ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன.
இதை ஸ்டார்ட் செய்து 6.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் இரண்டு வேரியன்ட்கள் அறிமுகமாகிறது. 20 அங்குல அலாய் சக்கரம், ரூப் ரேக், கழற்றி மாட்டும் வகையிலான ஏணி, பன்முக செயல்பாடு உடைய ஸ்டீயரிங் சக்கரம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். நான்கு கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளது. இனிய இசையை வழங்க பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது