< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
ஹோண்டா எஸ்.பி 160 அறிமுகம்
|2 Aug 2023 11:53 AM IST
ஹோண்டா எஸ்.பி 160இரு சக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எஸ்.பி 160. இதில் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
இது 162.7 திறன் கொண்ட ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளதால் 12.9 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இந்த வாகனம் 5 கியர்களைக் கொண்டது. இந்நிறுவனத்தின் யுனிகார்ன் மோட்டார் சைக்கிளை விட எஸ்.பி 160 மோட்டார் சைக்கிள் சற்று தோற்றத்தில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இதன் பெட்ரோல் டேங்க் 12 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.10 லட்சம்.