< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4 வி அறிமுகம்
|26 July 2023 1:14 PM IST
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4 வி என்ற பெயரிலான புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.41 லட்சம். ஸ்போர்ட்டி வடிவமைப்பில் கம்பீரமான தோற்றத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
எல்.இ.டி. முகப்பு விளக்கு, இரட்டை வண்ணம் ஆகியன ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளுக்குரிய தோற்றத்தை அளிக்கிறது. சாகசப்பிரியர்கள் எதிர் பார்க்கும் அம்சங்கள் இதில் உள்ளன. 200 சி.சி. திறன் கொண்ட 4 வால்வு ஆயில் கூல்டு என்ஜின், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை டேஷ் போர்டில் வெளிப்படுத்தும். மஞ்சள், கருப்பு உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.