டுகாடி டயவெல் வி 4 அறிமுகம்
|பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் டயவெல் வி 4 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.25.91 லட்சம். இது 1058 சி.சி. திறன் கொண்ட வி 4 கிரண்ட்டுரிஸ்மா என்ஜினைக் கொண்டது. இந்த மோட்டார் சைக்கிள் 168 ஹெச்.பி. திறனையும் 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.
இரண்டு சிலிண்டர் என்ஜினைக் ெகாண்டிருந்த இது தற்போது நான்கு சிலிண்டரைக் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. வாகனத்தின் எடை 12 கிலோ குறைக்கப்பட்டு தற்போது 236 கிலோ கொண்டதாக உள்ளது. சஸ்பென்ஷன்கள் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது.
இதில் 6 கியர்கள், டி.ஆர்.எல். விளக்கு, முன்புறம் எல்.இ.டி. முகப்பு விளக்கு, டி.எப்.டி. திரை உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி, வாகனத்தில் குரூயிஸ் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன. இத்துடன் ஏ.பி.எஸ். எனப்படும் ஆன்டிபிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வந்துள்ளது.