< Back
ஆட்டோமொபைல்
ரெனால்ட் கிகெர், கிவிட், டிரைபர் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
ஆட்டோமொபைல்

ரெனால்ட் கிகெர், கிவிட், டிரைபர் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

தினத்தந்தி
|
13 Sept 2023 3:18 PM IST

ரெனால்ட் நிறுவனம் தனது கிகெர், கிவிட் மற்றும் டிரைபர் மாடல் கார்களில் அர்பன் நைட் மாடலில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு மாடலிலும் தலா 300 கார்களை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இம்மூன்று மாடல் கார்களிலும் கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் உள்ளன. உள்பகுதியிலேயே ரியர் வியூ மிரர் வசதி இந்த கார்களில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

கிகெர் மாடல் 72 ஹெச்.பி. திறன் மற்றும் 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் 100 ஹெச்.பி. திறன் 152 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இந்த கார் 5 கியர்களைக் கொண்டது.

கிவிட் மற்றும் டிரைபர் மாடல் கார்கள் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. கிவிட் மாடல் 68 ஹெச்.பி. திறனையும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், டிரைபர் மாடல் 72 ஹெச்.பி. மற்றும் 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக்கூடியது. இவை இரண்டுமே 5 கியர்களைக் கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பினால் இதில் ஆட்டோமேடிக் கியர் மாடல் காரைத் தேர்வு செய்யலாம்.

விற்பனையக விலை :

கிகெர் - சுமார் ரூ.6.33 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை.

கிவிட் - சுமார் ரூ.4.69 லட்சம் முதல் ரூ.6.32 லட்சம் வரை.

டிரைபர் - சுமார் ரூ.6.33 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை.

மேலும் செய்திகள்