< Back
ஆட்டோமொபைல்
மேம்படுத்தப்பட்ட ஜீப் கம்பாஸ்
ஆட்டோமொபைல்

மேம்படுத்தப்பட்ட ஜீப் கம்பாஸ்

தினத்தந்தி
|
27 Sept 2023 2:24 PM IST

ஜீப் நிறுவனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான எஸ்.யு.வி. மாடல் கம்பாஸ். இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கம்பாஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்போது 5 வேரியன்ட்கள் (ஸ்போர்ட், லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் மற்றும் எஸ்) கிடைக்கின்றன. முந்தைய மாடல்கள் நான்கு சக்கர சுழற்சி கொண்டவை. தற்போது அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல் 2 சக்கர சுழற்சி கொண்டது. இத்துடன் இது ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.23.99 லட்சம்.

டீசல் மாடலாக வந்துள்ள போதிலும் எரிபொருள் சிக்கனமானது. புதிய வடிவமைப்பில் கிரில் மற்றும் அலாய் சக்கரம் இடம்பெற்றுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 16.2 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. வயர்லெஸ் சார்ஜர் வசதி கொண்டது.

2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜினைக் கொண்ட இது 170 ஹெச்.பி. திறனை, 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

மேலும் செய்திகள்