< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
ஹோண்டா ஷைன் 100
|31 March 2023 2:03 PM IST
இருசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹோண்டா நிறுவனம் தனது ஷைன் மாடல் மோட்டார் சைக்கிளில் 100 சி.சி. திறன் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.64,900. இதில் ஓ.பி.டி 2 எனப்படும் சுயமாக கோளாறுகளை கண்டறியும் வசதி உள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் 20 சதவீத எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கக் கூடியது. ஹோண்டா தயாரிப்புகளில் தற்போதைக்கு இதுதான் விலை குறைந்த மோட்டார் சைக்கிளாகும். 99.7 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 7.6 ஹெச்.பி. திறனையும், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.
இந்தியாவில் மொத்தம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளில் 100 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு விற்பனையாகிறது. இதனால் ஹோண்டா ஷைன் இந்தப் பிரிவில் கணிசமான விற்பனை சந்தையைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.