ஹோண்டா ஹைனெஸ் லெகசி எடிஷன்
|ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார் சைக்கிளான ஹைனெஸ் சி.பி. 350 மாடல் மற்றும் சி.பி. 350 ஆர்.எஸ். மாடலில் லெகசி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார் சைக்கிளான ஹைனெஸ் சி.பி. 350 மாடல் மற்றும் சி.பி. 350 ஆர்.எஸ். மாடலில் லெகசி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.2,16,356.
இதில் சி.பி. 350 மாடல் லெகசி எடிஷனாகவும், சி.பி. 350 ஆர்.எஸ். மாடல் நியூ ஹியூ எடிஷன் என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 350 சி.சி. திறன் கொண்ட இது மோட்டார் சைக்கிளின் திறனை நேசிக்கும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நவீன வடிவமைப்பு, மிகச் சிறந்த செயல்பாடுகளை ஒருங்கே கொண்ட தாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான எல்.இ.டி. முகப்பு விளக்கு, எல்.இ.டி. இன்டிகேட்டர், எல்.இ.டி. பின்புற விளக்கு ஆகியவை இதில் உள்ளது. லெகசி எடிஷன் பேர்ல் சைரன் நீல நிறத்தில் கிடைக்கும்.
ஹியூ எடிஷன் மோட்டார் சைக்கிள், ஸ்போர்ட்ஸ் சிவப்பு, அதெலடிக் நீல மெட்டாலிக் பெயிண்ட் நிறங்களில் கிடைக்கும். இந்த இரண்டு மாடலிலும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர் உள்ளது. அத்துடன் ஹோண்டா ஸ்மார்ட்போன் வாஸ்ட் கண்ட்ரோல் சிஸ்டம் வசதி யும், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (ஹெச்.எஸ்.டி.சி.) வசதியும் கொண்டது. இவ்விரு மோட்டார் சைக்கிளிலும் 348.36 சி.சி. திறனை வெளிப்படுத்தும் ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது.
இது 15.5 கிலோவாட் திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 3,000 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப் படுத்தும் வகையில் 5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஹியூ எடிஷன் விற்பனையக விலை சுமார் ரூ.2,19,357.