< Back
ஆட்டோமொபைல்
ஹீரோ ஹெச்.எப். டீலக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்
ஆட்டோமொபைல்

ஹீரோ ஹெச்.எப். டீலக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

தினத்தந்தி
|
15 Jun 2023 2:05 PM IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹெச்.எப். டீலக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளில் ஸ்பெஷல் எடிஷனைக் கொண்டு வந்துள்ளது. இது நான்கு புதிய வண்ணங்களில் (நெக்ஸஸ் நீலம், கேண்டி பிளேசிங் சிவப்பு, கருப்புடன் இணைந்த ஹெவி கிரே, சிவப்புப் புள்ளிகளுடன் கருப்பு) வந்துள்ளது. டீலக்ஸ் கேன்வாஸ் கருப்பு என்ற மாடலில் இன்ஜின் பகுதி முழுவதும் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

மப்ளர், முன்புற போர்க், கிராப் ரெயில் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் இருக்கும். 3 டி ஹெச்.எப். டீலக்ஸ் எழுத்துகள் பக்கவாட்டுப் பகுதியில் உள்ளன. டியூப்லெஸ் டயர், செல்ப் ஸ்டார்ட்டர், யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இது வழக்கமான 97.2 சி.சி. ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 5.9 கிலோவாட் திறனையும், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் டேங்க் 9.6 லிட்டர் கொள்திறன் உடையது. இதன் எடை 112 கி.கி. இது 733 மி.மீ. நீளம் உடையது. இரு நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகை யிலும், அலாய் சக்கரம் கொண்டதாக வந்துள்ளது. சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் வசதி உடையது.

மேலும் செய்திகள்