டிரம் பிரேக், புளூடூத் இணைப்பு வசதியுடன் டி.வி.எஸ். ஜூபிடர் அறிமுகம்
|டிரம் பிரேக், புளூடூத் இணைப்பு வசதியுடன் டி.வி.எஸ். ஜூபிடர் அறிமுகம் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் ஜூபிடர் மாடல் ஸ்கூட்டர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இந்த மாடலில் தற்போது இஸட்.எக்ஸ். எனும் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.84,468.
இதில் டிரம் பிரேக், ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் எனப்படும் புளூடூத் இணைப்பு வசதி, குரல் வழி கட்டுப்பாடு, ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்பு குறித்த அறிவிப்புகள், ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகிய வசதிகள் உள்ளது. ஸ்டார்லைட் நீலம் மற்றும் ஆலிவ் கோல்ட் உள்ளிட்ட புதிய கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். ஏர் கூல்டு 109.7 சி.சி. திறனை வெளிப்படுத்தும். ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்ட இது 7.8 ஹெச்.பி. திறனையும் 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். டெலஸ்கோப்பிக் பிரேம், மோனோ ஷாக் அப்சார்பரைக் கொண்டுள்ளது.