< Back
ஆட்டோமொபைல்
பொலெரோ நியோ ஆம்புலன்ஸ்
ஆட்டோமொபைல்

பொலெரோ நியோ ஆம்புலன்ஸ்

தினத்தந்தி
|
27 Sept 2023 2:41 PM IST

இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முதல் முறையாக பொலெரோ நியோ பிளஸ் என்ற பெயரில் ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தயாரித்துள்ளது.

இந்த மாடலில் அகலமான சக்கரங்களைக் கொண்டிருப்ப தால் இதை ஆம்புலன்ஸ் தயாரிப்புக்கு இந்நிறுவனம் தேர்வு செய்து அதில் உரிய மாற்றங்களுடன், ஆம்புலன்ஸ் வாகனத்தில் இடம்பெற வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.13.99 லட்சம்.

2021-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட நியோ மாடல் 2.2 லிட்டர் எம்ஹாக் என்ஜின், மூன்றாம் தலைமுறை சேஸிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் மேல் பாகம் உறுதியான உருக்கு கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. 6 கியர்களைக் கொண்டுள்ள இது 120 ஹெச்.பி. திறனையும், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். நகர போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக இதன் வடிவமைப்பு உள்ளது சிறப்பம்சமாகும்.

ஆம்புலன்ஸ் வாகன வடிவமைப்புக்கு வழங்கப் படும் வழிகாட்டு நெறி முறைகள் முழுமையாக இதில் பின்பற்றப்பட்டுள்ளன. நோயாளிகளை பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆக்சிஜன் சிலிண்டர், வாஷ் பேசின், 4 பேர் பயணிக்கும் வகையில் ஏ.சி. வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.யு.வி.க்கள் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல், உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் தயாரிப்பிலும் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகள்