< Back
ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்
ஆட்டோமொபைல்

பி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்

தினத்தந்தி
|
11 Oct 2023 2:25 PM IST

பிரீமியம் வாகனங்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எக்சீட் ஐ.எக்ஸ் 1 என்ற பெயரில் முழுவதும் பேட்டரியில் இயங்கும் இ-காரை அறிமுகம் செய்துள்ளது.

சொகுசு கார் பிரிவில் பேட்டரியில் ஓடும் முதலாவது கார் இதுவாகும். 5-வது தலைமுறை தொழில்நுட்பத்தைக் கொண்டதாக எக்சீட் அறிமுகமாகியுள்ளது. அடாப்டிவ் முகப்பு விளக்கு, அடாப்டிவ் இருக்கைகள், அடாப்டிவ் எம் சஸ்பென்ஷன், நான்கு சக்கர சுழற்சி ஆகிய வசதிகள் இதன் சிறப்பம்சமாகும். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 440 கி.மீ. தூரம் வரை ஓடும். ஸ்டார்ட் செய்த 5.6 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விடும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ. ஆகும். 313 ஹெச்.பி. திறனையும், 494 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.66.90 லட்சம். வெள்ளை, சில்வர், கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்