< Back
ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 அறிமுகம்
ஆட்டோமொபைல்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3 அறிமுகம்

தினத்தந்தி
|
28 April 2023 6:04 PM IST

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ் 3 எம் 40 ஐ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்னி வடிவிலான கிரில் கருப்பு வண்ணத்தில் வந்துள்ளது. இதில் 20 அங்குல அலாய் சக்கம், சிவப்பு பிரேக் காலிப்பர் உள்ளது. எக்சாஸ்ட் குழாய்கள் கருமையான குரோமில் ஆனவை. புரூக்ளின் கிரே, சபையர் கருப்பு என அடர் வண்ணங்களில் மட்டும் வந்துள்ளது. உள்புறம் 12.3 அங்குல இன்போடயின்மெண்ட் தொடு திரை உள்ளது.

இது பி.எம்.டபிள்யூ. ஐ-டிரைவ் 7 இயங்குதள இணைப்பு மூலம் செயல்படக்கூடியது. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை கொண்டது. முத்தரப்பு கிளைமேட் கண்ட்ரோல், கண்கள் கூசாத விளக்கு வெளிச்சம் கொண்டது. இனிய இசையை வழங்க ஹார்மோன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. 360 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக்கூடியது. நான்கு சக்கர சுழற்சியோடு 8 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. இதன் விலை சுமார் ரூ.69.90 லட்சம்.

மேலும் செய்திகள்