< Back
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ. 220 ஐ எம் அறிமுகம்
|6 Sept 2023 4:04 PM IST
பிரீமியம் மற்றும் சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக 220 ஐ.எம். என்ற பெயரிலான பெர்பாமென்ஸ் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரை ரூ.1.5 லட்சம் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் 2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன் படுத்தப்பட்டுள்ளது.
இது 176 ஹெச்.பி. திறனையும், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்த 7.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் விலை சுமார் ரூ.45.80 லட்சம்.
இதன் உள்புறம் இரட்டை வண்ணங்கள் (கருப்பு மற்றும் பீச்) கொண்டதாக இருக்கும். இதில் 10.25 அங்குல தொடுதிரை, இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. வயர்லெஸ் சார்ஜர் வசதி கொண்ட இதில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள் உள்ளன.