< Back
ஆட்டோமொபைல்
ஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்
ஆட்டோமொபைல்

ஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்

தினத்தந்தி
|
25 Oct 2023 10:54 PM IST

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் ஆடி எஸ் 5 மாடலில் ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இரண்டு அழகிய கண்கவர் வண்ணங்களில் (டிஸ்ட்ரிக்ட் பச்சை, மிதோஸ் கருப்பு) இது வெளிவந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.81,57,000. மிக அழகிய மேம்படுத்தப்பட்ட தோற்ற வடிவமைப்பு, மேட்ரிக்ஸ் எல்.இ.டி. லேசர் முகப்பு விளக்கு, சிவப்பு நிற பிரேக் காலிப்பர்ஸ் ஆகியன இந்த காரின் தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இதில் 3.0 டி.எப்.எஸ்.ஐ. வி 6 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இது 354 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். தானாக பூட்டிக் கொள்ளும் வசதி கொண்டது. உள்ளே 31.24 செ.மீ. அளவிலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. 180 வாட் திறன் கொண்ட 6 சேனல் ஆம்பிளிபயர் 10 ஸ்பீக்கருடன் வந்துள்ளது. 25.65 செ.மீ. அளவிலான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உள்ளது. மூன்றடுக்கு குளிர்சாதன வசதி இருப்பதால் பயணத் தின்போது சோர்வு தோன்றாது.

மேலும் செய்திகள்