< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 30.12.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 30.12.2024

தினத்தந்தி
|
30 Dec 2024 6:29 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 15-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.18 வரை கேட்டை பின்பு மூலம்

திதி: இன்று அதிகாலை 04.43 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.00 - 7.00

நல்ல நேரம் மாலை: 4-45 - 5-45

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை மாலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 09.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை

ராசிபலன்:-

மேஷம்

பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்த வண்ணம் இருக்கும். வியாபாரிகளிடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவர். எதிர்பார்த்தது தங்களுக்கு கிடைக்கும். சின்னத்திரை கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் மேம்படும். '

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. விரும்பியவரை தேடிச்சென்று சந்தித்து மகிழ்வீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

பிரச்சினைகள் எளிதில் தீரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீட்டில் அமைதி நிலவும். தேகம் பலம் பெறும். மாணவர்களது திறமை பளிச்சிடும். காதலர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம். சிக்கனம் தேவை. உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். மனதில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் சரளமாகும். கலைஞர்களின் புகழ் ஓங்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். எடுத்த காரியங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கணவன்–மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

அலுவலகப் பணியாளர்களின் எண்ணங்கள் நிறைவேறும். கலைஞர்களுக்கு கற்பனை வளம் பெருகும். உடன் பிறப்புகள் உதவுவர். நினைத்த காரியங்கள் அனுகூலமாகும். வேற்று மொழி சார்ந்தவர்கள் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.மன தைரியம் பிறக்கும். கணவர் பக்கபலமாய் இருந்து வருவார்கள். வியாபாரிகளுக்கு அனுகூலமானப் போக்கு தென்படும். பணம் பல வழியில் வந்து சேரும். விவசாயிகள் ஏற்றம் அடைவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

உறவினர் பக்கபலமுடன் இருப்பர். தேகம் பளிச்சிடும். பணப்புழக்கம் திருப்தி தரும். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். வீடு மனையால் லாபம் வரும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கும். உடன் பிறப்புகள் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.உடல் நலம் பலம் பெறும். நட்பால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த காரியம் வெற்றியைத் தரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் விலகிப் போவர்.மற்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உடல்நிலை சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர்.விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். உணவில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மேலும் செய்திகள்