இன்றைய ராசிபலன் - 29.12.2024
|12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் மார்கழி மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்: இன்று முழுவதும் கேட்டை
திதி: இன்று அதிகாலை 03.54 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம்: மரண, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 7.45 - 8.45
நல்ல நேரம் மாலை: 3.15 - 4.15
ராகு காலம் காலை: 04.30 - 06.00
எமகண்டம் காலை: 12.00 - 1.30
குளிகை மாலை: 3.00 - 4.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி
ராசிபலன்:-
மேஷம்
அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கலைஞர்களுக்கு சம்பளம் கூடும். உத்யோகஸ்தர்கள் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்
தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அரசியல்வாதிகள் பொது கூட்டங்களுக்காக வெளியூர் செல்வீர்கள். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கடகம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். மாணவர்கள் நன்கு படிப்பர். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
அதிக விற்பனைக்காக மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவு செலவுகளை சரிபார்ப்பது நல்லது. காதலர்களிடம் ஊடல்கள் வந்து போகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுநலத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
புதிய பிரபலங்கள் அறிமுகமாவர். தம்பதிகளிடைலலயே ஒற்றுமை கூடும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. நட்பால் ஆதாயம் உண்டு. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
விருச்சிகம்
வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.பணப் பிரச்சினை இருக்காது. குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
பிரபலங்கள் உதவுவர். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பழைய நண்பரை சந்திப்பீர்கள். உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
நண்பர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் சுய உதவிக்குழுவில் தலைமை தாங்குவர். குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சில சமயம் தங்கள்கோதரர் உதவுவார்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை