இன்றைய ராசிபலன் - 28.12.2024
|12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் மார்கழி மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை
நட்சத்திரம்: இன்று இரவு 10.54 வரை அனுஷம் பின்பு கேட்டை
திதி: இன்று அதிகாலை 2.41 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 07. 45 - 08.45
நல்ல நேரம் மாலை: 04.45 - 5.45
ராகு காலம் காலை: 9.00 - 10.30
எமகண்டம் மாலை: 1.30 - 3.00
குளிகை காலை: 6.00 - 7.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி
ராசிபலன்:-
மேஷம்
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
ரிஷபம்
மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களை நன்கு மதிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மிதுனம்
உடல் உபாதை அதிகமிருக்கும். கவனம் தேவை. விவேகமுடன் செயல்பட்டு வெற்றியைக் குவிப்பீர்கள். திருமண விசயத்தில் உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தேக ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
உறவினர்கள் வருகை உண்டு. உறவினர்களால் பெரிதும் மதிக்கப்படுவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். செலவு கூடுதலாகும். சிக்கனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு கடுமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
தொழில்.அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தம்பதிகளிடத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். பணவரவு நன்றாக இருக்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுகளை சமாளித்து ஓரளவு பணம் சேமிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர்கள் ஏற்றம் காண்பர். தொழில் சிறப்பாக நடக்கும், கொடுக்கல் - வாங்கல் சீராகும். நோய் எதிர்ப்புசக்தி கூடும். வியாபாரம் சிறப்பாக காணப்படும். பணப் புழக்கம் சரளமாகும். வழக்குகளில் சாதகமானப் போக்கு தென்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
கணவன் - மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். உடல் நலம் பெறும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். சுப காரியங்கள் கூடி வரும். கலைஞர்களுக்கு வெற்றி குவியும். பண நடமாட்டம் அதிகரிக்கும். மார்கெட்டிங் துறையினர் முன்னேற்றம் அடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
தனுசு
கணவன் - மனைவி உறவு இனிக்கும். மார்கெட்டிங் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். உடல் நலம் தேறும். பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். எதிரிகள் சரணடைவர். மகிழ்ச்சி தரும் நாளாகும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும். கணவன்–மனைவி உறவு தித்திக்கும். தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும்.உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
சளி தொந்தரவு நீங்கும். பெற்றோரின் உடல் நிலையில கவனம் தேவை. எதிரிகள் விலகி ஓடுவார்கள். தொலை தூர பயணம் உண்டு. வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். நண்பர்கள் உதவுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை