< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 27.12.2024
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 27.12.2024

தினத்தந்தி
|
27 Dec 2024 6:17 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 09-04 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி: இன்று அதிகாலை 01-00 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 12.15 - 1.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.45 - 01.15

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன்:-

மேஷம்

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அசாத்தியமான விசயங்களை சட்டென்று முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

நல்ல காரியத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய பதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக அமையும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முடிப்பர்.

கணவன், மனைவி இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

பூர்வ சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்காமல் சமரசமாக தீர்த்துக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்கள் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

மாணவர்கள் படிப்பு, வேலையில் முன்னேறுவர். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள், நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்சினை வர வாய்ப்பில்லை. வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

பிள்ளைகளின் செயல்களில் பொறுமையாக கண்காணிக்கவும். உணவில் கவனம் தேவை. சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம். தம்பதிகள் ஒற்றுமை காப்பர். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

உத்யோகஸ்தர்களுக்கு, சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம். பெண்கள், வரவுக்கேற்ப செலவு செய்வர். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

உடல்நிலை நன்றாக இருக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். மாணவர்களுக்கு, நண்பர்களால் உதவி உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். உத்யோகஸ்தர்களுக்கு, சலுகைகள் கிடைக்க தாமதமாகலாம். மாணவர்கள், படிப்பில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும். மார்கெட்டிங்பிரிவினர் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றி அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

வாகன பராமரிப்பு செலவு உயரும். பணவரவு நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மேலும் செய்திகள்