< Back
இன்றைய ராசி பலன்
Todays Horoscope - 11.01.2025
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 11.01.2025

தினத்தந்தி
|
11 Jan 2025 6:33 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

ஜனவரி 11

கிழமை: சனிக் கிழமை

தமிழ் வருடம்: குரோதி

தமிழ் மாதம்: மார்கழி

நாள்: 27

ஆங்கில தேதி:11

ஆங்கில மாதம்:ஜனவரி

வருடம்:2025

நட்சத்திரம்:இன்று பிற்பகல் 12.34 வரை ரோகினி பின்பு மிருகசீரிஷம்

திதி: இன்று காலை 08-13 வரை துவாதசி, பின்பு திரயோதசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 08.15 - 09.00

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் காலை: 09.00 - 10.30

எமகண்டம் மாலை: 1.30 - 03.00

குளிகை காலை: 6-00 - 7-30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பற்று வரவு சுமார்தான். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் எதிர்காலத்தை திட்டமிடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். குறுகிய பயணம் மேற்கொள்வீர்கள். இளைஞர்களுக்கு நிரந்தரப்பணி கிடைக்கும். தாயார் நலனில் கவனம் தேவை. ஆராய்ச்சியாளர்கள் பயன் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் மிகும். பிள்ளைகளால் நன்மை கிட்டும். பணியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். இடம் வாங்கும் முயற்சி பலிக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. காதல் கசக்கும். பழைய கடனை தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

பங்குதாரர்களிடம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தொழில் துவங்க திட்டமிடுவர். தம்பதிகள் மனம் விட்டு பேசுவர். இணையதள வியாபாரம் லாபம் தரும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரிப்பது நலம். புதிய நட்பினர் உதவுவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் .

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். அரசியல் ஈடுபாடு கூடும். பெண்கள் வேலையை விரைவாக முடிப்பர். வழக்கில் இழுபறிகள் நீங்கும். சுப காரியம் கை கூடும், படிப்பில் ஆர்வம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

நினைத்த பொருட்கள் வந்து சேரும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தொலை தூர தொடர்பில் லாபம் உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். தேவைகள் பூர்த்தியாகும். விரும்பிய உணவை உண்பீர்கள். பெண்களுக்கு சேமிக்கும் ஆர்வம் கூடும். கை, கால் வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

எடுத்த காரியம் எளிதில் முடியும். பொது நல சேவை கூடும். நட்பால் நன்மை உண்டு. அறிவாற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் விருப்பம் நிறைவேறும். வேற்றுமதத்தினரால் அனுகூலம் உண்டு. குல தெய்வத்தை பிரார்த்திப்பீர்கள். பெற்றோர் உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

எதிர்பாராத செலவு ஏற்படும். வழக்குகள் தள்ளிப் போகும். திருமணப் பேச்சு பலன் தரும். மேற்படிப்பிற்கு ஆயத்தம் ஆவீர்கள். பிள்ளைகளின் திறமை பளிச்சிடும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மூலிகை மருத்துவத்தில் மனம் நாடும். உடற்பயிற்சியில் ஆர்வம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுறுசுறுப்பாக வீட்டுப்பணிகளை செய்வீர்கள். புதிய தொழில் கைகூடும். தொலை தொடர்பு ஆக்கம் தரும். திருமணத் தடை விலகும். நட்பால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். ஆன்மீகத்தில் மனம் நாடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய மாற்றுவழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தம்பதிகள் திட்டமிட்டு செயல்படுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

புது வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வங்கி லோன் கிடைக்கும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

நல்ல வரண் அமையும். படிப்பில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் விற்பனை கூடும். பழைய வீட்டை புதுப்பிப்பீர்கள். பெண்களுக்கு மதிப்பு கூடும். உணவில் கட்டுப்பாடு தேவை. உடலுக்கு ஓய்வு கிடைக்கும். பங்குச் சந்தை சரிவு காணும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மேலும் செய்திகள்