< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 05.01.2025
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 05.01.2025

தினத்தந்தி
|
5 Jan 2025 6:27 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 09.28 வரை பூரட்டாதி, பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று இரவு 09.11 வரை சஷ்டி, பின்பு சப்தமி

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.30 - 8.30

நல்ல நேரம் மாலை: 3.30 - 4.30

ராகு காலம் காலை: 04-30 to 06-00

எமகண்டம் காலை: 12.00 - 1.30

குளிகை மாலை: 3.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

ராசிபலன்:-

மேஷம்

உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுப்பணிகளில் உள்ளவர்கள் சகாக்களின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசாஙகத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

குடும்பத் தலைவிகளுக்கு சேமிக்கும் ஆர்வம் கூடும். அவ்வப்போது கை, கால் வலி வந்து நீங்கும். குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வர். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். நட்பால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மிதுனம்

வீடடிற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். சேமிப்பினை கூட்ட திட்டமிடத் துவங்குவீர்கள். வேற்றுமதத்தினரால் அனுகூலம் உண்டு. புதிய தொழில் துவங்க ஏதுவான காலம். உடல் நலம் சிறப்படையும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வரனிற்காக பார்ப்பதற்கு பதிவு செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

காதல் கசக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

புதிய நட்பினர் உதவுவார்கள். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். வீண் டென்ஷன் வந்துப் போகும்.மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பிள்ளைகளுடன் வெளியூர் சென்று வருவீர்கள். மேலதிகாரிகளிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளின், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். பணியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது நிலம், வீடு வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

பழைய கடனை தீர்ப்பீர்கள். சகோதரிக்கு திருமணம் செட்டாகும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டி தொடரும். பற்று வரவு சுமார்தான். குடும்பத்தில் நல்லது நடக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிக வியாபாரத்தில் விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

பிள்ளைகள் நன்கு படிப்பர். பணவரவில் சிக்கல் இல்லை. கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு.எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல் நலம் தேறும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

அரசு காரியங்கள் முடியும்.சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். பொது தொண்டில் புகழ் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியடை வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மேலும் செய்திகள்