< Back
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் - 03.01.2025
இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் - 03.01.2025

தினத்தந்தி
|
3 Jan 2025 6:31 AM IST

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் மார்கழி மாதம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 12-58 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

திதி: இன்று அதிகாலை 02-44 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை:9-30 முதல் 10-30 வரை

நல்ல நேரம் மாலை: 4-30 முதல் 5-30 வரை

ராகு காலம் காலை: 10-30 முதல் 12-00 வரை

எமகண்டம் மாலை: 3-00 முதல் 4-30 வரை

குளிகை காலை: 7-30 முதல் 09-00 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 12-30 முதல் 01-30 வரை

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 முதல் 7-30 வரை

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: புனர்பூசம்,பூசம்

ராசிபலன்:-

மேஷம்

வியாபார தொடர்பான வெளியூர் பயணம் வெற்றி தரும். பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் கனவு வீட்டில் குடிபுகுவீர்கள். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பிள்ளைகளின் திருமண முயற்சி காலதாமதமின்றி முடியும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி பதக்கம் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எளிதில் சுப காரியம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மிதுனம்

வேலைதேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய கடனில் ஒரு தொகையை அடைத்துவிடுவீர்கள். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பெற்றோர் சேமிப்பிலிருந்து ஒரு பகுதியில் ஆபரணங்கள் வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

மனைவி வழி உறவால் மேன்மையடைவீர்கள். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். தாயின் உடல் நலம் சீரடையும். தேவையில்லாத மனபயம் விலகும். மனம் அமைதியைத் தேடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

வீடு மனை வாங்கும் திட்டம் பலிதமாகும். மனசோர்வு நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடை.க்கும். தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை கூடும். நண்பர்களிடம் தங்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

பெண்கள் குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பர். உடல் பொலிவும் சுறுசறுப்பும் மிகும். கலைஞர்களுக்கு வருவாய்க்கு குறை இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் குடும்ப விசயத்தை சொல்லாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

எதிர்பார்த்த காரியம் முடியும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். காதலர்களிடையே விட்டுக் கொடுக்கும் தன்மை உண்டாகும். பெண்களுக்கு அறியாமை விலகும்.கடன் தொல்லை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

தொலை தூர பயணம் வெற்றி தரும். தேர்வை வெற்றிகரமாக சந்திப்பீர்கள். சகோதரியின் மூலம் நன்மை உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். தேகம் பலம் பெறும். கடன் பைசலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம்

கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். பணவரவு பாக்கெட்டினை நிரப்பும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

மாணவர்கள் எதிர்பாலினரிடத்தின் நட்பை விலக்குவது நன்மையைத் தரும். மூத்த சகோதரரால் நன்மை விளையும். மனதிற்கு பிடித்த விசயங்கள் நடக்கும். வழக்கறிஞர்கள் சாதனைப் படைப்பர். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சொகுசு வாகனம் வாங்குவீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் தங்கள் காரியம் கைகூடும். வேலையில் பதவி உயர்வு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மேலும் செய்திகள்